நடந்து முடிந்த இயக்குனர் ஷங்கர் மகள் 2வது திருமணம்.! மாப்பிள்ளை இவர்தானா!! வைரல் புகைப்படம்!!director-shankar-daughter-marriage

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநராக வலம் வருபவர் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் தொடர்ந்து பல டாப் ஸ்டார்களின் நடிப்பில் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். அவரது இயக்கத்தில் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

 இயக்குனர் ஷங்கருக்கு 2 மகள்கள்
 மற்றும் ஒரு மகன் உள்ளார்.  இவர்களில் மூத்தமகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு புதுச்சேரி கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ரோஹித்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ரோஹித் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுதததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் ஐஸ்வர்யா அவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

shankar

இந்நிலையில், ஐஸ்வர்யாவுக்கும் ஷங்கரின் துணை இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த புகைப்படங்களை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இன்று அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் என பலரும் இவர்களது திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

shankarshankar