மாஸ்டர் படப்பிடிப்பில் நடந்த அழகிய கொண்டாட்டம்! 100வது நாளில் பிரபல இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்!!Director rathnakumar birthday celebrated in master shooting spot

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 14 பொங்கல் தினத்தையொட்டி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற  திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மஹேந்திரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

இப்படம் வெளியாகி உலகளவில் பெரும் வசூல் சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி டிஆர்பியிலும் முன்னணி வந்தது. மாஸ்டர் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 100 நாட்கள் ஆன நிலையில் விஜய் ரசிகர்கள்  #100DaysOfBBMaster” என்ற ஹேஷ்டாக்கை ட்ரெண்டாக்கினர்.

இந்தநிலையில் மேயாத மான், ஆடை போன்ற படங்களின் இயக்குநரும், மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றியவருமான ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது தளபதி விஜயுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் கேக் வெட்டுவதை கடா வெட்டுவது போல் நினைத்து வெட்டும் முன் கும்பிட்ட தருணம். என் வாழ்க்கையில் முதல் முறையாக, எனது பிறந்த நாள் மறக்கமுடியாததாக மாற்றப்பட்டது. நன்றி விஜய் சார். நன்றி நண்பன் லோகேஷ் என பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.