" எனக்கு மெச்சூரிட்டி இல்லை " பேட்டியின் போது மனம் திறந்த இயக்குனர் நெல்சன்..Director Nelson openup about simbhu movie

சிம்பு நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கி வந்த "வேட்டை மன்னன்" திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதற்கான காரணம் குறித்து இயக்குனர் நெல்சன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

nelson

அவர் கூறியதாவது, " வேட்டை மன்னன் பட சமயத்தில், எனக்கு மெச்சூரிட்டி இல்லை. அதில் நிறைய குறைகள் இருந்தன. அது இப்போதுதான் எனக்குப் புரிகிறது. இங்கு நாம் நினைப்பது போல் எல்லாம் நடந்து விடாது.

மீண்டும் அந்தக் கதையை முழுவதுமாக மாற்றியமைத்து, மீண்டும் படமாக எடுக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் சின்னத்திரையில் இருந்து தான் சினிமாவிற்கு வந்தேன். 

nelson

ஒரு படம் எடுப்பது அவ்வளவு சுலபமில்லை. நிறைய போராட்டங்கள் இருக்கும். எதிலும் சிக்கிக் கொள்ளாமல் , குறித்த நேரத்தில் அனைத்தையும் முடிப்பது எப்படி என்று இந்த 5 வருட அனுபவத்தில் கற்றுக்கொண்டேன்' என்று நெல்சன் கூறியுள்ளார்.