பெற்றோர்களே, பிள்ளைகளின் செல்போனை கவனிங்க.. சிறுமிகள் உல்லாச விவகாரத்தில் இயக்குனர் மோகன் அறிவுரை.!Director Mohan about Recent News Awareness 

 

சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்ற, தாம்பரத்தை சேர்ந்த 17 வயது சிறுமி இருவரால் கற்பழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. விசாரணையில் சிறுமி, அவரது தோழியான மற்றொரு பெண் ஒருவருடன் சேர்ந்து 11 வாலிபர்களை போனில் அழைத்து உல்லாசமாக இருந்த அதிர்ச்சி உண்மை அம்பலமானது. 

இந்த தகவலால் தமிழகமே பதறிப்போயுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் தொடர்புடைய 11 நபர்கள் (6 சிறார்கள் உட்பட) அதிரடியாக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் மோகன், "பெற்றோர்களே, உங்களின் பிள்ளைகளுடைய செல்போனை அடிக்கடி கண்காணியுங்கள். 

பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரி செல்லும் வரையில் போனை லாக் செய்யாமல் இருக்க அறிவுறுத்துங்கள். உண்மையை அறிந்து சொல்கிறேன், நீங்கள் நினைத்து பார்க்க இயலாத தவறுகள் நடக்கின்றன. கவனம் தேவை" என கூறியுள்ளார்.