கைதி படம் உருவாக அந்த இரண்டு முக்கிய படங்கள்தான் காரணம்! இயக்குனர் ஓபன் டாக்!

கைதி படம் உருவாக அந்த இரண்டு முக்கிய படங்கள்தான் காரணம்! இயக்குனர் ஓபன் டாக்!


Director logesh kanakaraj talks about kaithi movie

மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ளது கைதி திரைப்படம். படத்தில் ஹீரோவுக்கு ஜோடி யாரும் கிடையாது, ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்சன் கலந்த த்ரில்லராக இயக்கியுள்ளதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் தீபாவளியை முன்னிட்டும் கைதி திரைப்படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில்  கைதி படத்தில் இடம்பெற்றுள்ள கார்த்தியின் கதாபாத்திரம் கமலின் விருமாண்டி படம் மற்றும் ஹாலிவுட் படமான டை ஹார்ட் இவற்றின் கதாபாத்திரத்தை முன்னுதாரமனாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

kaithi

குறிப்பிட்ட இந்த இரண்டு படங்களும் படத்தின் டைட்டிலில் கெளரவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கைதி படம் வெளியாகும் அதே நாளில் தளபதி விஜய் நடித்திருக்கும் பிகில் படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.