"பாலா தான் என்னை பத்திரமாக பார்த்துக்கொண்டார்" வணங்கான் சர்ச்சையில் சிக்கிய நடிகை பேட்டி.!

"பாலா தான் என்னை பத்திரமாக பார்த்துக்கொண்டார்" வணங்கான் சர்ச்சையில் சிக்கிய நடிகை பேட்டி.!


Director Bala Actress Mamitha Baiju Issue 

 

பாலாவின் இயக்கத்தில், அருண் விஜய் மமிதா பைஜூ உட்பட பலர் நடித்து விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் வணங்கான். இப்படம் வெளியீடுக்கு தயாராகி வரும் நிலையில், படத்தில் நடித்த பைஜூ சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். 

அந்த பேட்டியில் இயக்குனர் பாலா படப்பிடிப்புத்தளத்தில் கடுமையாக நடந்துகொண்டதாக கூறிய காட்சிகள் வெளியாகி வைரலாகி சர்ச்சையை  ஏற்படுத்தின. 

இந்நிலையில், மமிதாவை இயக்குனர் பலா தாக்கியதாக சர்ச்சை ஏற்படவே, நடிகை அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும், தான் விலகியதற்கு இயக்குனர் காரணம் இல்லை என்றும் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனியார் சேனலில் விளக்கம் அளித்தபோது, "நான் சென்னையில் இருந்தபோது என்னை நல்ல அண்ணன்போல இயக்குனர் பார்த்துக்கொண்டார். படப்பிடிப்பு தலத்தில் சுறுசுறுப்புடன், லேசான கோபத்துடன் வேலை பார்ப்பது அவரது இயல்பு. 

அவர் கேட்பதை சரியாக செய்தால் பாராட்டுவார். அது சரியாக வரவில்லை என்றால் கற்றுக்கொடுத்து கண்டிப்பார். அது அவரின் இயல்பு குணம். நான் கூறிய ஒருவார்த்தையை எடுத்துக்கொண்டு, அதனை முற்றிலும் தவராக்கிவிட்டனர். வணங்கான் படத்தில் இருந்து நான் விலக, வேறொரு படத்தில் நான் ஒப்பந்தமிட்டதே காரணம். வேறு காரணம் இல்லை" என கூறினார்.