அட..! நம்ம அட்லியா இது..? பாலிவுட் பக்கம் போனதும் மனுஷன் ஆளே மாறிட்டாரே..! வைரலாகும் புகைப்படம்..

அட..! நம்ம அட்லியா இது..? பாலிவுட் பக்கம் போனதும் மனுஷன் ஆளே மாறிட்டாரே..! வைரலாகும் புகைப்படம்..


Director atlee new hair style photos goes viral

புது ஹேர் ஸ்டெயிலால் ஹீரோ ரேஞ்சுக்கு பிரபலமாகி வருகிறார் பிரபல இளம் இயக்குனர் அட்லி.

ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் அட்லி . முதல் படமே ஆஹா ஓஹோ என ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார். இதன் பலனாக தளபதி விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று படங்களை இயக்கி இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார் அட்லி .

atlee

இந்நிலையில் அட்லி அடுத்ததாக பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துவரும் அட்லி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், புதிய ஹேர் ஸ்டெயிலுடன் பார்க்க மாஸாக இருக்கும் அட்லியின் புதிய ஹேர்ஸ்டைல் தற்போது வைரலாகி வருகிறது.

atlee

இந்த ஸ்டெயில் உங்களுக்கு செட் ஆகல என சிலரும், புது ஹேர் ஸ்டெயிலில் பார்க்க ஹீரோ மாதிரி இருக்கீங்க என பலரும் அட்லியின் புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துவருகின்றனர்.