இயக்குனர் செல்வராகவனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.? வாயை பிளக்கும் ரசிகர்கள்.!?Director and actor selva ragavan assets value

தமிழ் திரைத்துறையில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் செல்வராகவன். திரையில் நடிகராக  ஆசைப்பட்ட செல்வராகவன் பின்னர் இயக்குனராக தமிழ் திரை துறையில் களமிறங்கினார். இவர் இயக்கத்தில் முதன்முதலில் 2002 ஆம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தை இயக்கினார். முதல் படமே மிகப் பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

Selva

அடுத்தடுத்த காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் இவர் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற திரைப்படங்கள் தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் தற்போது நடிகராகவும் களமிறங்கியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான ஒரு சில திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. மேலும் தற்போதும் ஒரு சில திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தமாகி பிசியான நடிகராக இருந்து வருகிறார் செல்வராகவன்.

Selva

இது போன்ற நிலையில் திரைத்துறையில் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் செல்வராகவனின் சொத்து மதிப்பு குறித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது ஒரு படத்திற்கு இரண்டு முதல் நான்கு கோடி வரை சம்பளம் வாங்கும் செல்வராகவன் சொத்து மதிப்பு 30 முதல் 50 கோடி வரை இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.