சினிமா

தமிழ் படம் 2 - திமுகவை மட்டும் ஏன் கலாய்க்கவில்லை.? இயக்குனர் அமுதன் அதிரடி!

Summary:

Director amuthan speech about tamil padam two

அனைத்து நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை கலாய்த்து வெளியான தமிழ் படம் 2ல் இயக்குனர் சிஎஸ் அமுதன் ஏன் திமுகவை மட்டும் கலாய்க்கவில்லை என்ற கேள்விக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் தமிழ் படம் 2. மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே, சதீஷ், மனோபாலா ஆகியோர் பலர் நடுத்துள்ளனர்.  

 

 

 

இப்படத்தில், கொஞ்டம் கூட யோசிக்காமல், ரஜினிகாந்த், விஜய், அஜித், விஷால், கமல்ஹாசன் என்று அனைவரையும் கலாய்த்து காட்சிகள் அமைந்துள்ளது. மேலும், அரசியல் பிரமுகர்களையும் கலாய்த்து காட்சிகள் அமைந்துள்ளது. ஆனால், திமுகவை மட்டும் கலாய்க்கவில்லை என்று தற்போது கேள்வி எழுந்தது.  

 

 

இதற்கு விளக்கம் அளித்துள்ள இயக்குனர் சிஎஸ் அமுதன் கூறுகையில், என்னுடைய அரசியலை தான் நான் படத்தில் காட்டினேன். இதில் எந்த தவறும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. இது என்னுடைய தனிச்சிறப்பு. இதனை எந்த வகையிலும் மறுக்க முடியாது. சார்லி சாப்ளின் முதல், ரஜினிகாந்த் வரை ஒவ்வொரு இயக்குனரும் அவரவர் அரசியலை தான் சினிமாவில் வைக்கிறார்கள் என்று கூறினார் என்று கூறினார்.


Advertisement