ஆம்பளையக்கூடவா?.. படவாய்ப்புக்காக இயக்குனர் அமீரை அட்ஜ்ஸ்ட் செய்ய சொன்ன தயாரிப்பாளர்.. இயக்குனர் பரபரப்பு பேட்டி.!

ஆம்பளையக்கூடவா?.. படவாய்ப்புக்காக இயக்குனர் அமீரை அட்ஜ்ஸ்ட் செய்ய சொன்ன தயாரிப்பாளர்.. இயக்குனர் பரபரப்பு பேட்டி.!


director-ameer-sultan-speech-producer-want-adjust-with

 

திரைத்துறையில் தவிர்க்க இயலாத இயக்குனர்களின் பட்டியலில் முக்கியமானவராக இருப்பவர் அமீர். இவர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவான் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான வடசென்னை, மாறன் உட்பட பல படங்களில் நடித்தும் இருக்கிறார். திரை வாழ்க்கையில் பிரபலமாக இருக்கும் இயக்குனர் அமீர் மதுரையில் பிறந்தவர் ஆவார்.

இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "திரைத்துறைக்கு நான் வரும் போது பாலு மகேந்திரா, மகேந்திரன் மாபெரும் இயக்குனர்களாக இருந்தனர். அவர்களின் மீதுள்ள ஈர்ப்பால் திரைத்துறைக்கு வந்து பெரும் இயக்குனராக வேண்டும் என்று முயற்சித்தேன். நான் பொதுவாக எந்த வேலை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என நினைப்பேன். அதனைப்போன்ற பணியே என்னை சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மாற்றியது. 

ameer

திரைத்துறையில் ஈகோ முக்கிய கதாபாத்திரம் வகிக்கிறது. எனக்கு 100 நண்பர்கள் இருந்த நிலையில், அதில் 80 பேரை வெவ்வேறு காரணங்கள் இழந்துவிட்டேன். 20 பேரை நண்பர்களாக வைத்துள்ளேன். என்னால் இன்றுள்ள தயாரிப்பாளர், ஹீரோ போன்றோர்களுடன் ஒத்துழைத்து செல்ல இயலவில்லை. என்னை யாரும் சுயமரியாதை கொண்டவராக மதித்து இல்லை. எனது குழந்தைகள், மனைவி என்னை ஏன் வசதிப்படைக்கவில்லை என்று கேட்டது இல்லை.

சமீபத்தில் என்னை சந்தித்த தயாரிப்பாளர் இரவு நேரத்தில் ஏன் இவ்வுளவு கஷ்டப்படுகிறீர்கள்?. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யலாம் அல்லவா? என்று கேட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும்?. பெண்களுக்கு தான் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை செல்கிறது என்றால், ஆண்களுக்கு என்ன?. என்னிடம் வந்து எதற்காக கேட்கிறீர்கள்? என்று கேட்டால், அவர்கள் (ஹீரோ) கூறுவதற்கு ஓகே சொல்லுங்கள் என்று கூறுகிறார். தயாரிப்பாளர்களுக்கு மரியாதையே இல்லை" என்று பேசியிருந்தார்.