தல படத்தின் ஸ்வெட்டர் மேட்டரை கிண்டல் செய்த மாஸ்டர் படம்! காதல்கோட்டை இயக்குனர் கொடுத்த செம பதிலடி!!director-agathiyan-explain-about-sweater-using-in-kadha

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இப்படம்  கடந்த ஜனவரி 14 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று பெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தில் ஆரம்பத்தில் நடிகர் விஜய் முதல் பாதியில் குடிக்கு அடிமையாக இருப்பார். இந்நிலையில் ஏன் இப்படி குடிக்கிறீங்க என யாவராவது கேட்டால் அவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படத்தின் கதையையும் கூறுவார்.

அவ்வாறு அவர் ஹீரோயினிடம் காதல்கோட்டை பட கதையையும் கூறுவார். அஜித் மற்றும் தேவயானி நடிப்பில் வெளியாகி செம ஹிட்டான திரைப்படம் காதல் கோட்டை. முகம் பாராமல் காதலிக்கும் இப்படத்தில் ஸ்வெட்டர் காதல் சின்னமாக இருக்கும். இப்படத்தில் ஊட்டியில் இருக்கும் நடிகை தேவயானி ராஜஸ்தானில் இருக்கும் அஜித்திற்கு ஸ்வெட்டரை பரிசளித்து இருப்பார்.

மாஸ்டர் படத்தின் கதையை விஜய் கூறும்போது ஹீரோயின் ராஜஸ்தானில் ஸ்வெட்டரா? என கேட்டிருப்பார். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் காதல்கோட்டை படத்தை கேலி செய்ததாக விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த காதல் கோட்டை படத்தின் இயக்குனர் அகத்தியன் கூறுகையில், ராஜஸ்தானில் மிகவும் கடுமையான குளிர் இருக்கும். அதை அங்கு போய் பார்த்தால்தான் தெரியும்.

 காதல் கோட்டை படத்திற்காக லொகேஷன் பார்க்க சென்றபோது அங்கு பயங்கர குளிர். மேலும் அப்படத்தில் வரும் கமலியும் ஊட்டியில் இருப்பார். அதுவும் குளிர் பகுதிதான். அதனால் ஸ்வெட்டர் பயன்படுத்தினோம்.  அது தப்பு, லாஜிக் இல்லை என யாராவது நினைத்தால் அவர்களுக்கு ஜாக்ரபி தெரியவில்லை என அர்த்தம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.