அரசியல் தமிழகம் சினிமா

கடந்த தீபாவளிக்கு அதிமுக பிரச்னை! இந்த பொங்கலுக்கு அமமுக பிரச்னை! ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சோதனை!

Summary:

dialogue for sasikala in darbarmovie


ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் நேற்று வெளியாகியுள்ள படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் காசு இருந்தால் சிறைக்கைதி கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வசனம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தப் படத்தின் ஒரு காட்சியில் காவல்துறை அதிகாரி ஒருவர், இப்போதெல்லாம் சிறையிலிருப்பவர்கள் ஷாப்பிங் போகிறார்கள் என்று ரஜினியிடம் பேசுவதாக வசனம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா, தர்பார் படத்தில் இருக்கும் குறிப்பிட்ட வசனத்தை நீக்காவிட்டால் ரஜினி மற்றும் அதன் இயக்குனர் மீது வழக்கு தொடரப்படும் என கூறி உள்ளார்.

கடந்த 2018 தீபாவளி அன்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில், அரசு கொடுக்கும் இலவச மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை தூக்கி வீசிய காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சில காட்சிகள் நீக்கப்பட்டு சர்க்கார் படம் ஒளிபரப்பானது.

இந்தநிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திற்கு சசிகலா ஆதரவாளர்கள், மற்றும் அமமுக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Advertisement