அடக்கொடுமையே.. தியேட்டரில் இருந்து பதறியடித்து தப்பியோடிய தனுஷ்.. ரசிகர்களால் ஏற்பட்ட திடீர் பரபரப்பு..!!

அடக்கொடுமையே.. தியேட்டரில் இருந்து பதறியடித்து தப்பியோடிய தனுஷ்.. ரசிகர்களால் ஏற்பட்ட திடீர் பரபரப்பு..!!


dhanush-saves-rashikhanna-from-huge-fans-crowd

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. மேலும் இந்த படத்தில் ராஷிகண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர் மற்றும் பிரகாஷ்ராஜ் போன்ற பல பிரபலங்களும் நடித்துள்ளனர்.

Dhanush

இன்று திரையரங்குகளில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திருச்சிற்றம்பலம் படத்தை ரசிகர்களுடன் காண பிரபல திரையரங்கிற்கு பட குழுவினரும் சென்றிருந்தனர்.

Dhanush

அத்துடன் படம் முடிந்து வெளியேறும் பொழுது நடிகர் தனுஷை சுற்றி ரசிகர்கள் பலரும் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், திரையரங்கில் இருந்து தப்பித்தால் போதும் என தனுஷ் தெறித்து ஓடியுள்ளார். 

Dhanush

மேலும், அந்த பரபரப்பில் கூட நடிகை ராஷிகண்ணாவை பாதுகாப்பாக கார் ஏற்றி அனுப்பிவைத்தார் தனுஷ். இது குறித்த வீடியோ அங்கிருந்தவர்களால் எடுக்கப்பட்ட நிலையில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.