தனுஷ் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்.. கேப்டன் மில்லர் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா.!

தனுஷ் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்.. கேப்டன் மில்லர் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா.!


Dhanush in Captain Miller movie Audio launch

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

Dhanush

இந்தப் படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சிவராஜ் குமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள்  பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Dhanush

இந்த நிலையில் தற்போது கேப்டன் மில்லர் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி டிசம்பர் முதல் வாரத்தில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.