சினிமா

தனுஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகரின் மகள்! யார் தெரியுமா? அடுத்த படம் குறித்த தகவல்.

Summary:

Dhanush casting with sara alikan in ranjana 2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிப்பையும் தாண்டி இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஒரு தலைசிறந்த கலைஞர். இவரது நடிப்பில் அசுரன் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் நடந்த விழா ஒன்றில் பேசிய தனுஷ் விரைவில் மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க இருப்பதாக கூறினார். ஏற்கனவே ராஞ்சனா என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார் தனுஷ். தற்போது ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராஞ்சனா பட இயக்குனர் ஆனந்த் எல் ராய் தான் ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குவார் என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான் நடிக்க உள்ளாராம். ஹிந்தி சினிமாவில் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர் பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement