சினிமா

புகழின் உச்சத்தில் இருந்த தேவயானி சிறுவயதில் எவ்வளவு அழகு பார்த்தீர்களா.! புகைப்படம் இதோ!!

Summary:

Devyani small age photo viral

தமிழ் சினிமாவில் காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை தேவயாணி. இப்படத்தில் அவர் நடித்த கமலி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதை தொடர்ந்து தேவயானி பெரிய வீட்டு மாப்பிள்ளை, சூரியவம்சம்,  மறுமலர்ச்சி, நீ வருவாய் என, நினைத்தேன் வந்தாய், வல்லரசு, அப்பு,  ஆனந்தம், ஃப்ரெண்ட்ஸ்,  பஞ்சதந்திரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான கோலங்கள்,  மஞ்சள் மகிமை, கொடிமுல்லை, முத்தாரம் என்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தேவயானி பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,  வங்காளம்,  கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்த தேவயானிகென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. 

தேவயானியின் தம்பி நகுல். அவர் பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த அவருக்கு தற்போது சரியான படவாய்ப்புகள் எதுவும் இல்லை.இந்நிலையில் தேவயானி மற்றும் நகுல் ஒன்றாக இருக்கும் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


Advertisement