மீண்டும் பிரபல தொலைக்காட்சி சீரியலில் களமிறங்கும் நடிகை தேவயானி! அவருக்கு ஜோடி யார்னு பார்த்தீர்களா? செம ஹிட்தான்!!

மீண்டும் பிரபல தொலைக்காட்சி சீரியலில் களமிறங்கும் நடிகை தேவயானி! அவருக்கு ஜோடி யார்னு பார்த்தீர்களா? செம ஹிட்தான்!!


Devyani re entry in zee tamil serial

தமிழ் சினிமாவில அஜித் நடிப்பில் வெளிவந்த காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி, கனவுகன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை தேவயானி. அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த  அவர் விஜய், அஜித், விக்ரம், கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார்.

மேலும் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டுமின்றி சீரியலிலும் நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். நடிகை தேவயானி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற சீரியலில் அபி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் அவருக்கு ஜோடியாக பாஸ்கர் கதாபாத்திரத்தில் அபிஷேக் என்பவர் நடித்திருந்தார். அந்த தொடர் 6 வருடங்கள் ஒளிபரப்பாகி செம ஹிட்டானது.

இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தேவயானி மீண்டும்  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். மேலும் இந்த தொடரிலும் அபி பாஸ்கர் ஜோடி மீண்டும் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.