வாவ்..நடிகை தேவயானிக்கு இவ்வளவு பெரிய மகளா!! அச்சு அசல் அவரைப் போலவே இருக்கிறாரே!

Summary:

தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்

தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தேவயானி. அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் விஜய், அஜித்,விக்ரம், கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார்.

மேலும் கிராமத்து பெண்ணாக, மாடர்னாக எப்படி நடித்தாலும் பொருத்தமாக இருக்ககூடிய தேவயானி 90 காலகட்டங்களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார். இந்தநிலையில் அவர் இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர்.

மேலும் தமிழ்,மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வந்த தேவயானி தற்போது சினிமாக்களில் சிறு முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் தேவயானி அவரது கணவர் ராஜ்குமார் மற்றும் மகள் இனியா ஆகியோர் விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் தேவயானியின் மகளா இது? அச்சு அசல் அவரைப் போலவே இருக்கிறாரே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement