சினிமா

இந்தியன் 2 படத்தில் இணையும் மற்றுமொரு பிரபல நடிகர்! யார் தெரியுமா?

Summary:

Delhi ganesh joining with indian part two movie

இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் ஷங்கர். இவரது படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. சமீபத்தில் ரஜினியை வைத்து இவர் இயக்கிய 2 . 0 திரைப்டம் தமிழ் சினிமாவை இந்திய அளவில் புகழ்பெற செய்தது. தற்போது உலகநாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் சங்கர்.

இந்தியன் முதல் பாகம் வித்தியாசமான கதைக்களம் கொண்ட மாபெரும் வெற்றிப்படம். தற்போது இந்த இரண்டாம் பாகம் தயாராகி வருவதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இரண்டாம் பாகத்திலும் கமலஹாசன் கதாநாயகனான நடிக்கிறார். நடிகை காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர வேறு யாரெல்லாம் இந்தியன் 2 ஆம் பாகத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்து தகவல் எதுவம் இல்லை.

தற்போது இந்தியன் 2 படத்தில் கமலின் பேவரட் நடிகர் மற்றும் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் இந்தியன் 2வில் ஒரு முக்கியமான ரோலில் நடிப்பதாக அவரே கூறியுள்ளார்.


Advertisement