சினிமா

தெய்வ திருமகள் படத்தில் நடித்த பேபி சாரா இப்போ எப்படி வளந்துட்டாங்க பாருங்க! புகைப்படம்!

Summary:

Deiva thirumagal child artist baby sara current photos

தெய்வ திருமகள் திரைப்படம் மூலம் பிரபலமானவர் பேபி சாரா. இந்தப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டது. இந்தப்படத்தின் வெற்றிக்கு பேபி சாராவும் ஒரு காரணம் என்றால் அது மிகை ஆகாது. தெய்வ திருமகள் திரைப்படம் வெற்றி அடைந்ததை அடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சாரா.

பின்னர் மிகப்பெரிய நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினர். பின்னர் தெய்வ திருமகள் இயக்குனர் AL விஜய் இயக்கத்தில் உருவான சைவம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் சாரா. இந்த படமும் இவர்க்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

இதை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பழமொழி படங்களில் நடித்துவருகிறார் பேபி சாரா. கடைசியாக விழித்திரு என்னும் தமிழ் படத்தில் நடித்திருந்தார் சாரா. இந்நிலையில் தெய்வ திருமகள் படத்தில் சிறு குழந்தையாக காட்சியளித்த சாரா தற்போது மிகவும் வளர்ந்து பெரிய பெண் போல் காட்சியளிக்கிறார். 

இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் விரைவில் சினிமாவில் கதாநாயகியாக வலம்வரப்போகிறார் என கூறிவருகின்றனர்.

 


Advertisement