சினிமா

அடேங்கப்பா! இந்த ஹீரோவின் படத்தில் நடிப்பதற்கு தீபிகா படுகோனேவுக்கு இவ்வளவு சம்பளமா? வாயைப்பிளந்த ரசிகர்கள்!

Summary:

ஷாருக்கான் படத்தில் நடிப்பதற்கு நடிகை தீபிகா படுகோனேவுக்கு 15 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் தமிழில் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து இருந்தார். 

அடுத்ததாக அவர் மகாநடி படத்தைத் தயாரித்த அஷ்வினி தத் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப்படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.  அவருக்கு ஜோடியாக தீபிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 இதற்கிடையில் தீபிகா படுகோனே
சித்தார்த் ஆனந்த்  இயக்கும் ஷாருக்கான் பதான் என்ற புதிய படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் நடிக்க தீபிகா படுகோனேக்கு 15 கோடியாக சம்பளம் உயர்த்தபட்டதாக கூறப்படுகிறது.  இதனை கேட்ட ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர். 


Advertisement