சினிமா விளையாட்டு

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனைபடைத்த பி.வி.சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடிய தீபிகா படுகோனே.!

Summary:

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனைபடைத்த பிவி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடிய தீபிகா படுகோனே.!

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்கள் வென்ற பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். இதனையடுத்து பல்வேறு விளையாட்டு வீரர்கள், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் துறையினர் என பலதரப்பினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்தநிலையில் பி.வி.சிந்துவிற்கு பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே கடந்த வாரம் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விருந்து அளித்துள்ளார். இந்நிலையில், பிவி சிந்துவுடன் நடிகை தீபிகா படுகோனே பேட்மிண்டன் விளையாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில்  வெளியிட்டுள்ளார்.

உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட நடிகை தீபிகா படுகோனே, பி.வி.சிந்துவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "பிவி சிந்துவுடன் இணைந்து கலோரிகளை எரித்துக் கொண்டிருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.


Advertisement