சூப்பர் ஸ்டார் ரஜினியை அடுத்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே..! அடேங்கப்பா..! யார் அந்த நடிகர் தெரியுமா.?

சூப்பர் ஸ்டார் ரஜினியை அடுத்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே..! அடேங்கப்பா..! யார் அந்த நடிகர் தெரியுமா.?



Deepika padukone pair up with prabhas

பாலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே அடுத்ததாக நடிகர் பிரபாசுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை தீபிகா படுகோனே. கடந்த 2014 ஆம்  ஆண்டு வெளியான இந்த படத்திற்கு பிறகு தீபிகா எந்த ஒரு தென்னிந்திய சினிமாவிலும் நடிக்கவில்லை.

deepika padukone

இந்நிலையில் பிரபாஸ் நடிக்கவுள்ள பிரபாஸ் 21 படத்தை நடிகையர் திலகம் படத்தை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கவுள்ளார். வைஜெயந்தி மூவீஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தில்தான் தீபிகா படுகோனே நடிகர் பிரபாசுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

உலகளவில் புகழ்பெற்ற நடிகை தீபிகா படுகோனே தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பது தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய ஆச்சரியத்தையும்,  மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.