அடக்கொடுமையே இதற்குமா.! திருமணத்தை வைத்து தீபிகா செய்த காரியம், வெளியான ஷாக் தகவல்.!



deepika padukone insured her marriage

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான தீபிகா படுகோன்க்கும் அவரது காதலரான நடிகர் ரன்வீர் சிங்க்கும், இத்தாலியில் உள்ள லேக் கோமா நகரில்ந நேற்றும்,அதற்கு முதல் நாளும் திருமணம்  நடைபெற்றது. 

மேலும்  தீபிகா மற்றும் ரன்வீரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறையை சேர்ந்த எவருக்கும் அழைப்பு  விடுக்கப்படவில்லை.
மேலும் திருமணம் நடந்த ஓட்டலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 

மேலும் திருமணத்தின்போது  படம் பிடிப்பதை தடுக்க செல்போன் கேமராவில் ஸ்டிக்கர் ஒட்டபட்டது. இந்த கெடுபிடியால் திருமண புகைப்படங்கள் வெளியாகவில்லை. 

இந்த நிலையில் தீபிகா படுகோனேவும், ரன்வீர்சிங்கும் தங்கள் திருமணத்தை டெல்லியில் உள்ள ஒரு இன்சூரன்சு நிறுவனத்தில் பலகோடிக்கு காப்பீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விமான விபத்து, ஓட்டலில் தீவிபத்து, குண்டு வெடிப்பு போன்றவைகளை குறிப்பிட்டு தீபிகா,ரன்வீர் ஜோடி காப்பீடு செய்துள்ளனர்.