பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
திருமணத்திற்கு இப்படித்தான் வரவேண்டும், அதிரடியாக கண்டிஷன் போட்ட ரன்வீர்-தீபிகா ஜோடி.! என்ன கண்டிஷன் தெரியுமா?
பாலியல் பிரபலங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே விரைவில் திருமணம் செய்ய உள்ளனர் அவர்களின் திருமண ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கும் இளைஞர்களின் கனவுக் கன்னியான தீபிகா படுகோனேவும் காந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருவதாக இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளிவந்து சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் கிசுகிசுக்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் வரும் நவம்பர் 20ஆம் தேதி இத்தாலியில் திருமணம் செய்யவுள்ளதாகவும், அவர்களின் திருமண ஏற்பாடுகள் வெகு விமர்சையாக தொடங்கி உள்ளன எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் திருமணத்திற்கு குடும்பத்தினர்,நெருங்கிய நண்பர்கள் என மொத்தம் 30 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும், திருமணத்திற்கு பிறகு நடிகர் நடிகைகளை அழைத்து திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமணத்துக்கு வரும் உறவினர்களிடம் யாரும் செல்போன் எடுத்து வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்
மேலும் இவர்களது திருமணத்தை சமூக வலைத்தளங்கள் ,செய்தி நிறுவனங்களுக்கு பிரபலப்படுத்த விரும்பவில்லை என்பதால் இத்தகைய கண்டிஷன் போட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .