"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
HBD Deepika Padukone: பாலிவுட் திரையுலகின் அரசி, தீபிகா படுகோனின் பிறந்தநாள் இன்று: குவியும் வாழ்த்துக்கள்.!
கடந்த 2006ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ஐஸ்வர்யா என்ற திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான நடிகை தீபிகா படுகோன். இப்படம் தீபிகாவுக்கு முதல் படம் எனினும், நல்ல வெற்றியை பெற்றதால், அவர் முன்னணி நடிகையாக அறியப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, ஹிந்தி மொழியில் வெளியான பல படங்களில் நடித்து பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன், ரன்பீர் கபூரை உயிருக்கு உயிராக காதலித்து, பின் அதில் தோல்வி கண்டவர் ஆவார்.
இவரின் நடிப்பில் வெளியான ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், கோச்சடையான், XXX: Return of Xander Cage, ஜீரோ, பிரம்மஸ்திரா, பதான், ஜவான் ஆகிய படங்கள் நல்ல வெற்றியை அடைந்தன.
கடந்த ஆண்டில் மட்டும் ஜவான், பதான் என ஷாரூக்கானுடன் இரண்டு படங்களில் நடித்து இருந்தார். நடப்பு ஆண்டில் ஹிருத்திக் ரோஷனுடன் பைட்டர் படத்தில் நடித்துள்ளார்.
ஹிந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான படங்களில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோன், ஹாலிவுட்டிலும் தன்னை அறிமுகம் செய்து இருக்கிறார். இவருக்கு இன்று பிறந்தநாள்.
5 ஜனவரி 1986ம் ஆண்டு பிரகாஷ் படுகோன் - உஜ்ஜலா தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். தற்போது அவருக்கு 38 வயது ஆகிறது. கடந்த 2018ம் ஆண்டு காதலர் ரன்வீர் சிங்-கை கரம்பிடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். பாலிவுட்டின் அரசியாக புகழப்படும் தீபிகாவின் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களும், திரையுலகினரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.