சினிமா

நம்ம டாப் தமிழ் நடிகர்கள் அறிமுகமான முதல் படம் எது தெரியுமா? முழு விவரம்!

Summary:

Debut movie list of top tamil actors

தமிழ் சினிமாவில் அன்று தொடங்கி இன்டர்வரை பிரபலமாக இருப்பவர்களில் ஒருவர் நடிகர் பிரபு. அவர் நடிகராக அறிமுகமான முதல் படம் சங்கிலி. இந்த படத்தில் நடிகர் பிரபுவுடன் சிவாஜிகணேசன், ஸ்ரீபிரியா நடித்தனர். இந்தப் படத்திற்கு இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் இருவரும் இசையமைத்திருந்தனர்.

சினிமா, அரசியல் என கலக்கிக்கொண்டிருக்கும் நம்ம கேப்டன் நடித்த முதல்படம் இனிக்கும் இளமை. இதில் கேப்டனுக்கு ஜோடியாக ராதிகா நடித்திருந்தார்.

சட்டம் என் கையில் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்தவர் நம்ம கட்டப்பா சத்யராஜ். அன்றுமுதல் இன்றுவரை மிகவும் பிரபலமாக இருந்துவருகிறார்.

நடிகர் விஜயகாந்த் நடித்த வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நம்ம தளபதி விஜய். இவர் ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படம் நாளைய தீர்ப்பு. அந்தப் படத்தை அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கினார் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

5-amaravathi-ajith-debut-movie

நம்ம தல அஜித் நடித்த முதல் திரைப்படம் அமராவதி. எந்தஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் இவளவு தூரம் உயர்ந்துள்ளார் நம்ம தல அஜித். தற்போது விசுவாசம் படத்தில் பிசியாக நடித்துவருகிறார் அஜித்.

ரவி. இவர் நடித்த முதல் திரைப்படம் ஜெயம். படம் மாபெரும் வெற்றி பெற்றதால் அன்றுமுதல் ஜெயம் ரவி என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறார். இந்த படத்தை அவரது அண்ணண் ஜெயம் ராஜா இயக்கியிருந்தார்.

துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் அறிமுகமானார். இந்தப் படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கினார். ஆனால் திரையில் அவருடைய தந்தை கஸ்தூரி ராஜாவின் பெயர் மட்டும் வரும். இந்த படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பாளர்.

சரத்குமார் நடித்த முதல் படம் கண் சிமிட்டும் நேரம் இந்த படத்தில் கதாநாயகனாகவும் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசை வி எஸ் நரசிம்மன்.

13-surya-debut-film-nerukkner

சூர்யா நடித்த முதல் படம் நேருக்கு நேர். இந்த படத்தை இயக்குனர் வசந்த் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து இணைந்து விஜய் நடித்திருப்பார். சூர்யாவின் ஜோடியாக சிம்ரன் நடித்தார்.


Advertisement