ப்ளீஸ் இதை செய்யுங்க.. வாத்தி இசை வெளியீட்டு விழாவின் அந்த புகைப்படத்தை பகிர்ந்து டிடி விடுத்த தரமான கோரிக்கை.!dd-shares-vathi-audio-launch-picture-and-request-for-sh

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. 21 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடர்ந்து வரும் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்கள், இசை வெளியீட்டு விழா என பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆனால் காலில் ஏற்பட்ட நோய்க் காரணமாக தற்போது அவர் வாக்கிங் ஸ்டிக் உதவியுடனே நடந்து வருகிறார். மேலும் நின்று தொகுத்து வழங்க முடியாத நிலையில் அமர்ந்தபடியே சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் டிடி, வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிடி தொகுத்து வழங்கியுள்ளார். அப்பொழுது அவர் நீளமான நாற்காலியில் அமர்ந்தே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த அவர், கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.

அதில் அவர், இந்த பதிவு பல மணிக்கணக்கில் நின்றுகொண்டே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் எனது சக தொகுப்பாளர்களுக்காகவே பகிர்கிறேன். அது அவ்வளவு எளிதல்ல. எனவே நிகழ்ச்சியை நடத்துபவர்கள் தொகுப்பாளர்களுக்கு என தனி இருக்கை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் அது பார்வையாளர்களுக்கு நாங்கள் நின்று கொண்டே நிகழ்ச்சியை நடத்துவது போல இருக்கும். 5 மணி நேரமாக நின்று கொண்டே நிகழ்ச்சியை நடத்தும் எங்களுக்கு இது பெரியளவில் உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.  அந்த பதிவு வைரலான நிலையில் பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.