அட.. இது யாருப்பா?.. டிடி இப்படி ஒட்டிக்கிட்டு போட்டோ எடுத்துருக்காங்க..! யாரும் காணாத அசத்தல் புகைப்படம்..!! DD photo with her mom

தொகுப்பாளினி டிடி அவரது தாயாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் தொலைக்காட்சி தொடர்களை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி என்று தான் கூற வேண்டும். எந்த ஒரு பிரபலமும் முகம் சுழிக்கும் வகையில் செயல்படாமல், கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இவர் கில்லாடி.

இதனாலே இவருக்கென தனிரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும் இவர் நலதமயந்தி, விசில், பவர் பாண்டி, துருவ நட்சத்திரம், சர்வம் தாளமயம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2014 ஆம் வருடம் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் சட்டப்படி பிரிந்து விவாகரத்தும் செய்து கொண்டனர். 

dd

அதனை தொடர்ந்து தற்போது 35 வயதாகும் டிடிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அந்த மாப்பிள்ளை பெங்களூரைச் சார்ந்த விவாகரத்தான 42 வயது பிரபல தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்றும் தெரிய வருகிறது.

டிடியும் அவரின் அக்காவும் தொகுப்பாளினி என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில் தொகுப்பாளினி டிடி அவரது தாயாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.