விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகரா..Danush missed his chance to act in hit movie

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை அளித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படங்கள் மிகப் பெரும் வெற்றி அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

danush

இவர் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் ரசிகர்களின் மனதில் இன்று வரை நிலைத்து நிற்கிறது. காதல் கதை கொண்ட இப்படத்தில் சிம்பு மற்றும் திரிஷா போன்றவர்கள் நடித்துள்ளனர்.

இது போன்ற நிலையில், சமீபத்தில் கௌதம் மேனன் அளித்த பேட்டியில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் கதையை தனுஷ்காக தான் எழுதினேன். ஆனால் ஒரு சில காரணங்களினால் தனுஷினால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை.

danush

இதனை அடுத்து சிம்புவை வைத்து இப்படத்தை இயக்கினேன் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி தனுஷ் இப்படியொரு காதல் கதையை மிஸ் செய்து விட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.