சினிமா

நடிகர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! ஏன்? என்னாச்சு? வருத்தத்தில் ரசிகர்கள்!!

Summary:

நடிகர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! ஏன்? என்னாச்சு? சோகத்தில் ரசிகர்கள்!!

தமிழ் திரைப்பட நடிகர், இயக்குநர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்குபவர் டி. ராஜேந்தர்.  பாசப்பிணைப்புகளை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் டி. ராஜேந்தர் உயிருள்ளவரை உஷாவில் நடித்த நடிகை உஷாவை கரம் பிடித்தார். 

இவர்களுக்கு சிலம்பரசன், குறளரசன் என்ற இரு மகன்களும், இலக்கியா என்ற மகளும் உள்ளனர். சினிமாவில் மட்டுமின்றி டி.ராஜேந்தர் அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார். அவர் கடந்த சில காலங்களாகவே மகன் சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் எனவும், பெண் பார்ப்பதிலும் தீவிரம் காட்டி வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது திடீர் உடல்நல குறைவால் டி. ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த நான்கு நாட்களாக மருத்துமனைவியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது ஓரளவிற்கு நலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மருத்துவ சிகிச்சைக்காக சிம்பு தனது தந்தையை சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

    


Advertisement