சினிமா

சொன்னதை நிறைவேற்றிய இசையமைப்பாளர் இமான்! பார்வையற்ற இளைஞனுக்கு பாடும் வாய்ப்பு

Summary:

D iman gives chance to a blind boy

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு பார்வையற்ற இளைஞரின் குரல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. விஸ்வாசம் படத்தில் டி. இமான் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய கண்ணான கண்ணே பாடல் பலரின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. 

தற்போது அதே பாடல் ஒரு பார்வையற்ற இளைஞரின் வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றியுள்ளது. ஆம், அந்த இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் தான். 


கடந்த மாதம் இவர் பாடிய கண்ணான கண்ணே பாடல் வீடியோவை கண்ட இசையமைப்பாளர் டி.இமான், சமூக வலைதளத்தில் அந்த இளைஞரின் தொடர்பு எண்ணை கேட்டிருந்தார். 

பின்னர் அவரின் தொடர்பு எண் கிடைத்ததும் அந்த இளைஞரிடம் பேசிய இமான் தனது அடுத்த படத்தில் அவருக்கு பாடும் வாய்ப்பினை அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். அதனையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 


இமான் தான் கொடுத்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளார். தற்போது தயாராகி கொண்டிருக்கும் ஜீவாவின் சீறு என்ற படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் நொச்சிப்பட்டி திருமூர்த்தியை ஒரு பிண்ணனி பாடகராக அறிமுகம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி என இமான் இன்று ட்விட்டரில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். 


Advertisement