"அடடே... அசைந்தாடும் தென்றல்.." சேலையில் அம்சமாக அதுல்யா ரவி.! ட்ரெண்டிங் புகைப்படங்கள்.!cute-photoshoot-of-athulya-ravi

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருபவர் அதுல்யா ரவி. இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நாடோடிகள் 2, ஏமாளி மற்றும் முருங்கக்காய் சிப்ஸ் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் .

heroine

தென்னிந்திய திரையுலகை கலக்கி வரும் இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் இவர் நடித்த மீட்டர் என்ற திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் டீசல் என்ற திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா ரவி அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார் .

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 2.6 மில்லியன் பயனர்கள் இவரை பாலோ செய்து வருகின்றனர். தனது அன்றாட நடவடிக்கைகள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் ரீல்ஸ் என தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இவரது புகைப்படம் மற்றும் வீடியோ அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் . இந்நிலையில் சேலை அணிந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார் அதுல்யா ரவி.

heroine

"குட் வைப்ஸ் மட்டுமே பிரதிபலிக்கிறேன்" என்ற வாசகத்துடன் சேலை அணிந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இருக்கிறார். இந்த புகைப்படங்களை இதுவரை 45,575 பேர் லைக் செய்து இருக்கின்றனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது  இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. கொஞ்சும் அழகிய புன்னகையுடன் அதுல்யா ரவி இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.