ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
தங்க இடமில்லாமல் நடுத்தெருவில் படுத்து தூங்கும் குக்கூ பட நடிகர்.. வைரலாகும் வீடியோ.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில் சிறிய பட்ஜெட் படங்களில் ஒன்றான 2014 ஆம் ஆண்டு வெளியான 'குக்கூ' திரைப்படம் ரசிகர்களின் மனதில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், மாளவிகா நாயர் கதாநாயகியாவும் நடித்து தன் அட்டகாசமான நடிப்பு திறமையை நிரூபித்திருப்பார்கள். குக்கூ திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
இது போன்ற நிலையில், குக்கூ திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இளங்கோ என்பவர். இவரை பிரபல யூட்யூப் சேனல் ஒன்று சமீபத்தில் பேட்டி எடுத்தது.
இவர் தற்போது வீட்டை விட்டு வெளியே வந்து தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் நடுரோட்டில் படுத்து தூங்கி வருகிறாராம். மேலும் குக்கூ படத்திற்கு பிறகு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை. கண் தெரியாத காரணத்தினால் அலைந்து திரிந்து பட வாய்ப்பு கேட்கவும் வழியில்லை என்று பேசி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.