நடிகர் விஷாலின் சக்ராவிற்கு வந்த சிக்கல்! படத்தை வெளியிட அதிரடி தடை விதித்த நீதிமன்றம்!! எதனால் தெரியுமா?



court-ordered-to-stop-releasing-chakra-movie

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அறிமுக இயக்குனர் எம்எஸ் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சக்ரா. இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளது. மேலும் சக்ரா படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் சக்ரா திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாகவிருந்தது.

vishal

இந்தநிலையில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவி என்ற தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், விஷால் தயாரிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படத்தின் கதையை, அப்படத்தின் இயக்குனர் ஆனந்தன் ஏற்கனவே என்னிடம் தெரிவித்து அதனை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளார். ஆனால் தற்போது விஷால் தயாரிப்பில் அப்படம் உருவாகியுள்ளது. இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். 

அதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சக்ரா படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் நடிகர் விஷால் மற்றும் படத்தின் இயக்குனர் இதுகுறித்து பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.