சினிமா

இயக்குனர் ஷங்கருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Summary:

எந்திரன் கதை திருட்டு வழக்கு தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்த திரைப்படம் எந்திரன். இதில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால் இதற்கிடையில் எந்திரன் படத்தின் கதை எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் அது தான் எழுதிய ஜூகிபா என்ற கதை எனவும், அதனையே இயக்குனர் சங்கர் படமாக்கிவிட்டதாகவும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை ரத்து செய்யக்கோரி இயக்குனர் ஷங்கர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் விசாரணை நடைபெற்ற போது இயக்குனர் ஷங்கரும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இயக்குனர் சங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை எழும்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் விசாரணையை வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்று புகார்தாரர் தரப்பு சாட்சி விசாரணை நடைபெறும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement