தமிழகம் காதல் – உறவுகள்

காருக்குள் பிணமாக கிடந்த அழகிய காதல் ஜோடி.! விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி காரணம்!!

Summary:

Couple deadbody found in car

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபி.இவர் வெள்ளிப்பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார்.இவரது மகன் சுரேஷ் இவரும் அவரது தந்தையுடன் சேர்ந்து வெள்ளி தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் சுரேஷ்,  ஜோதிகா என்ற இன்ஜினியரிங் படித்து வந்த மாணவியை காதலித்து வந்தார். மேலும் இவர்களது காதல் விவகாரம் அவரது பெற்றோர்களுக்கு தெரிய வந்த நிலையில் இருவீட்டாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகியுள்ளனர். அதனை தொடர்ந்து இருவரையும் குடும்பத்தார்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில் பேருந்து நிலையம் அருகே காருக்குள் சுரேஷ் மற்றும் ஜோதிகா இருவரும் பிணமாக கிடந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 அதனை தொடர்ந்து இதுகுறித்து போலீசார்கள் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ஜோதிகாவிற்கு வேறு இடத்தில் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வந்ததால் மனவேதனை அடைந்த இருவரும் வெள்ளி தொழிலுக்கு பயன்படுத்தக்கூடிய சயனைடை சாக்லெட்டில் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement