சினிமா

கொரோனாவால் பிரபல நடிகரின் தந்தை மரணம்.! உயிருக்கு போராடும் தாய்!

Summary:

Coronoa virus affected for nico Santos father and mother

கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் இன்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. முதலில் சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் இன்று உலக நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. இதனால் அனைத்து நாட்டு தலைவர்களும் தங்களது நாட்டு மக்களை காப்பாற்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க நடிகரான நிக்கோ சாண்டஸ் என்பவரின் வளர்ப்பு தந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எனது தந்தையின் இறுதி நாட்களில் கூட என்னால் அவருடன் இருக்க முடியவில்லை. காரணம் நோய் தொற்று ஏற்ப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தள்ளி இருக்க வேண்டிய சூழல் ஏற்ப்பட்டது என நிக்கோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும் நிக்கோ சாண்டஸ் என்பவரின் தாயும் தற்போது கொரோனா நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதனை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நிக்கோ. மேலும் அதில் இந்த நேரத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்து அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி.

மேலும் என் அம்மாவுக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன், பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். 


Advertisement