சினிமா

என்னது! நடிகர் ராணா திருமணத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இதனை செய்திருக்க வேண்டுமா? விடுக்கப்பட்ட அதிரடி கட்டுப்பாடு!

Summary:

Corono test compulsary for attend actor rana marriage

உலக அளவில் பிரபலமான பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர் ராணா. இவர் தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ராணா  ஹைதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் ராணா  குடும்பத்தாருக்கு சொந்தமான ராமநாயுடு ஸ்டூடியோவில் நாளை 8ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்த  திருமணத்தில் கலந்து கொள்ள நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமணத்தில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தங்களுக்கு  கொரோனா தொற்று இல்லை என்பதை  உறுதி செய்து கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆங்காங்கே சானிடைசர்கள்  வைக்கப்பட்டு, சமூக விலகலுடன் பாதுகாப்பாக ராணா திருமணம் நடைபெற திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement