அட.. சூப்பரு! கூல் சுரேஷ்க்கு நடிகர் சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி.! பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைச்சாச்சு.!

அட.. சூப்பரு! கூல் சுரேஷ்க்கு நடிகர் சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி.! பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைச்சாச்சு.!


cool-suresh-going-to-act-in-simbu-next-movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு மாநாடு திரைப்படத்தைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இத்திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். 

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சாக பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷும் முக்கிய காரணம் ஆவார். 

நடிகர் சிம்புவின் வெறித்தனமான ரசிகரான அவர் எங்கு சென்றாலும் வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்த போடு என ரைமிங்காக பேசி படத்தை இலவசமாக ப்ரமோட் செய்து வந்தார்.  மேலும் அந்த டயலாக்கும் வைரலானது. படமும் செம ஹிட்டானது.

Cool Suresh

கூல் சுரேஷ் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இந்நிலையில் சிம்பு கூட அவருக்கு எந்த உதவியும் ய்யவில்லை என தகவல்கள் பரவியது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட சிம்புவிடம் கூல் சுரேஷ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு சிம்பு, தனது அடுத்த படத்தில் கூல் சுரேஷ்க்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

அதாவது  கூல் சுரேஷ் சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் கொரோனாகுமார் படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.