குக் வித் கோமாளி மணிமேகலை வீட்டில் வெடித்து சிதறிய குக்கர்! பின் நேர்ந்த அலங்கோலம்! வைரலாகும் வீடியோ!

cooker blast in cood with comali manimegalai house


cooker blast in cood with comali manimegalai house

பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில்  தொகுப்பாளினியாக இருந்து தனது கலகலப்பான பேச்சால் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றவர் மணிமேகலை. இந்நிலையில் விஜே மணிமேகலை, நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்தனர். அனால் அவர்களது காதலுக்கு  இரு குடும்பத்தாரும் சம்மதிக்காத நிலையில் அவர்களை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு நண்பர்களின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து அவர்கள் தற்போது அழகிய, சிறந்த காதல் ஜோடியாக விளங்கி வருகின்றனர். 

மேலும் வாழ்வில் பல கஷ்டங்களையும், சவால்களையும் சந்தித்த இந்த தம்பதியினர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகியுள்ளனர். அதனை தொடர்ந்து மணிமேகலை தற்போது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். 

manimekalai

இந்நிலையில் சமீபத்தில் மணிமேகலை தனது வீட்டில் சமைக்கும் பணியாளர் வராததால், அவரே குக்கரில் சாதம் செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் விசில் வராமல் சிறிது நேரத்தில் குக்கர் வெடித்து சிதறியுள்ளது. இதில் சமையல் அறை முழுவதும் அலங்கோலமாகியுள்ளது. இந்த வீடியோவை மணிமேகலையின் கணவர் ஹுசைன்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிமேகலையை கிண்டல் செய்து வெளியிட்டுள்ளார்.