சினிமா

அடக்கொடுமையே! தளபதியின் மாஸ்டர் பட வாய்ப்பு கிடைத்தும் உதறிய தள்ளிய குக் வித் கோமாளி புகழ்! ஏன் தெரியுமா?

Summary:

cook with comali puzhal refuse master movie chance

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை. அவர்களை பார்ப்பவர்கள் கவலைகளை மறந்து விழுந்து விழுந்து சிரிப்பர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. மேலும் குக் வித் கோமாளி புகழுக்கு தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் 40 நாள் நடிக்க வேண்டும் என்று கால்ஷீட் கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு புகழ் மறுத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, தளபதி படத்தில், அதுவும் லோகேஷ் அண்ணா படத்தில் நடிக்க முடியாதது  எனக்கு கஷ்டமாக உள்ளது.மேலும் விஜய் சாரோட நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. ஆனால்,மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு  நான் பிரபலமானதற்கு காரணமாக இருந்த விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து போக விரும்பவில்லை. கைதி படத்தில் கூட ஒரு கடைசி ஒரு சீனில் நடித்திருப்பேன்.அதுல என்னுடைய முகமே தெரியாது.

ஆனால் இந்த நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களிலேயே மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி விட்டேன். சமூக வலைத்தளங்களில் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் என்னை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மக்கள் மத்தியில் பிரபலமடைந்துவிட்டு பின்  சினிமாவில் நடிக்கலாம் என்றுதான் நான் நடிக்க போகவில்லை. அதோடு முதலில் நான் முடி வெட்டினனும் என்று சொன்னார்கள். முடி வெட்டினால் யாருக்குமே என்னை அடையாளம் தெரியாது என்று கூறியுள்ளார்.


Advertisement