என்னது.. குக் வித் கோமாளி புகழ் காதலியுடன் ரகசியத் திருமணம் செய்துகொண்டாரா? வெளிவந்த தகவல்!!cook with comali marriage with lover news spread in viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தனது ரகளையால் ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்து பெருமளவில் பிரபலமானவர் புகழ். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது. தற்போது விஜய் டிவியில் இவர் பங்கு பெறாத ஷோக்களே இல்லை எனலாம்.

புகழுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. மேலும் புகழ் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்திலும், சந்தானம் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் புகழ் அவரது காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் எனவும், அதில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. 

pugzhalமேலும் புகழ் காதலித்த பெண் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து புகழிடம் விசாரித்தபோது, பிரபலமாகிவிட்டாலே இப்படிப்பட்ட தகவல்கள் பரவுமா? நான் எல்லா இடத்திலேயும் சிங்கிள் எனதான் கூறி வருகிறேன். இத்தகவலை கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது என கூறியுள்ளார்.