"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
படுக்கைக்கு கட்டாயப்படுத்திய பிரபல இயக்குனர்.? உண்மையை போட்டுடைத்த லட்சுமி ராமகிருஷ்ணன்.!?
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், இயக்குனராகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் இயக்குனராக முதன்முதலில் 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமானார். பின்னர் மலையாளத்தில் 2006 ஆம் வருடம் சக்கர முத்து என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் நடிப்பு பல ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வந்தது.
இதன் பின்னர் 2008 ஆம் வருடம் கரு பழனியப்பன் இயக்கத்தில் பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பிறகு பொய் சொல்ல போறோம், எல்லாம் அவன் செயல், திரு திரு திரு, ஈரம், வேட்டைக்காரன், ஆதவன் போன்ற பல திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.
நடிகையாக மட்டுமல்லாமல், இயக்குனராகவும் தனது திறமையை வெளிப்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன் 2012 ஆம் ஆண்டு ஆரோகணம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் சிறந்த பெண் இயக்குனர் என்ற விருதை வென்றார். இதன் பிறகு நெருங்கி வா முத்தமிடாதே, ஹவுஸ் ஓனர், அம்மணி போன்ற ஒரு சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி பல கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இவ்வாறு சின்னத்திரை, வெள்ளித்திரை என பல துறைகளிலும் தனது திறமையை காட்டிய லட்சுமி ராமகிருஷ்ணனை பிரபல மலையாள இயக்குனர் அட்ஜஸ்ட்மெண்ட்டிற்க்கு அழைத்து கட்டாயப்படுத்தியதாகவும், இவர் மறுத்ததால் பல தொல்லைகள் சந்திக்க நேரிட்டதாகவும் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி யார் அந்த இயக்குனர் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இந்த நிலைமையா என்று கமெண்ட் செய்தும் வருகின்றனர்.