இளையராஜா பற்றி யாரும் அறியா பக்கங்கள்.. பேட்டியில் மனம் திறக்கும் சினிமா பிரபலங்கள்.!

இளையராஜா பற்றி யாரும் அறியா பக்கங்கள்.. பேட்டியில் மனம் திறக்கும் சினிமா பிரபலங்கள்.!


Cinema fame praised ilaiyaraja

தமிழ் சினிமாவில் இசை மாமேதையாக தற்போது வரை இருந்து வருபவர் இளையராஜா. ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடிய இளையராஜா முதன்முதலில் 1976ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

Ilaiyaraja

இவர் கால்ஷிட்டிற்காகவே காத்து கிடந்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்கள் படத்திற்கு ஒப்பந்தம் செய்து வந்தார்கள். அந்த அளவிற்கு சினிமாவில் உச்சத்தில் இருந்தார் இளையராஜா. தற்போது அடிக்கடி சர்ச்சையில்.சிக்கி வருகிறார் இளையராஜா

பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் சர்ச்சைய கிளப்பும் விதமாக இவர் பேசிவரும் வீடியோக்கள் இணையத்தில் பரவி நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். இதனிடையே இளையராஜா சினிமாவின் உச்சத்தில் இருந்த போது இவர் செய்த உதவிகளை குறித்து பல சினிமா பிரபலங்கள் பேசியிருக்கிறார்கள்.

Ilaiyaraja

மறைந்த நடிகர்களான மனோபாலா, மணிவண்ணன் மற்றும் பல நடிகர்கள் கூறியதாவது, இளையராஜா பணத்திற்கு ஆசை படமாட்டார். தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் படத்தை தயாரிக்க கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தால் இளையராஜா தானாவே முன்வந்து உதவி செய்வார்.அவர் இசையமைப்பதற்கு பணம் வாங்க மாட்டார் இவ்வாறு பல ஹிட் படங்களுக்கு பணம் வாங்காமலேயே இசையமைத்து கொடுத்திருக்கிறார் என்று பல பிரபலங்கள் இளையராஜாவை குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.