புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
குழந்தைகளை துள்ளி குதிக்க வைக்க மீண்டும் ஒளிபரப்பாகும் டோரா புஜ்ஜி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பொதுவாக கார்ட்டூன் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு கார்ட்டூன் தான் உலகம். சிறு குழந்தைகள் முதல் பள்ளி செல்லும் பிள்ளைகள் வரை அனைவருக்கும் கார்ட்டூன் பார்க்காமல் அந்த நாள் முடியாது.
இவற்றில் சில கார்ட்டூன்கள் நம் அறிவுக்கு தீனி போடும் வகையில் மிகவும் உபயோகமானதாக உருவாக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு கார்ட்டூன் நிகழ்ச்சி தான் "டோராவின் பயணங்கள்". இது 2000ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த ஒரு கற்றல் சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தது.
தொடர்ந்து 19 ஆண்டுகள் ஒளிபரப்பாகி வந்த இந்நிகழ்ச்சி, 35க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. டோராவுடன் வரும் குள்ளநரி, குரங்கு புஜ்ஜி ஆகிய கேரக்டர்களும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருந்தது.
இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு உயர்நிலை பள்ளிக்கு செல்லும் பெண்ணாக டோரா அப்டேட்டாகி படமாக உருவாக்கப்பட்டு வெளியானது. இந்நிலையில் தற்போது சுட்டி டிவியில் மீண்டும் டோராவின் பயணங்கள் ஒளிபரப்பாக உள்ளதாக சன் நெட்ஒர்க் குழுமம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.