அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
இந்த கஷ்டத்தையும் எளிதில் கடந்து விடுவீர்கள்.! நோயுடன் போராடும் சமந்தாவிற்கு ஆறுதல் கூறிய சூப்பர் ஸ்டார்!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கும் நடிகை சமந்தா இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் யசோதா. இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சமந்தா ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கு டப்பிங் பேசிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, சில மாதங்களுக்கு முன் எனக்கு மியோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. முழுமையாக குணமடைந்த பின் இதுகுறித்து சொல்லலாம் என நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்சினை குணமாக கூடுதல் காலமாகும். இதனை ஏற்றுகொண்டு நான் அதனுடன் போராடி வருகிறேன் என கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து சமந்தா விரைவில் குணமடைய பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நடிகர் சிரஞ்சீவி, அன்புள்ள சமந்தா, நமது வாழ்க்கையில் இதுபோன்ற சவால்கள் அவ்வப்போது வரும். அதன் மூலம் நம்மை பற்றி நாமே உணர முடியும். நீங்கள் அற்புதமான மனவலிமை கொண்ட மிகவும் தைரியமான பெண். இந்த கடினமான காலத்தை நீங்கள் சீக்கிரம் கடந்து வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உங்களுக்கு அதற்கான ஆற்றலும், தைரியமும் கிடைக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.