சினிமா

இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட சித்தப்பு சரவணனை புகழ்ந்து தள்ளிய பிரபலம்!! செம குஷியில் ரசிகர்கள்!!

Summary:

chinmayi tweet about saravanan got award

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் 3  நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத வகையில் பருத்திவீரன் சித்தப்பு சரவணன் இரவோடு இரவாக வெளியேற்றபட்டார்.

தான் பேருந்தில் பயணம் செய்யும் போது பெண்களை உரசியுள்ளதாக சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இதற்கு அவர் மீது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து பிக்பாஸ் அவரை மன்னிப்பு கேட்க கூறியிருந்தார். இந்த சம்பவம் நடந்து ஒருசில நாட்கள் ஆகிவிட்ட  நிலையில் இதே காரணத்திற்காக சரவணன் பிக்பாஸ் வீட்டிலில் இருந்து வெளியேற்றபட்டார்.

ஆனால் அவர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு அவரைப் பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.கடந்த வாரம் கமலும் அதைப்பற்றி எதுவும் பேசாமல் இருந்துவிட்டார். 
இந்நிலையில் தற்போது நடிகர் சரவணன் மாநில அளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான  “கலைமாமணி” விருதினை தனது குழந்தையுடன் சென்று வாங்கியுள்ளார்.

இந்நிலையில் அதற்கு வாழ்த்து கூறி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் அவரை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். தமிழக அரசு ஒரு சிறந்த தேர்வை செய்துள்ளது.  பிக்பாஸ் வீடு, அவரது சொந்த வீட்டில் எப்படி இருந்தார் என்பது  எனக்கு பெரிதல்ல.நீங்கள் மக்களின் உண்மையான அன்பிற்கு தகுதியானவர் என பதிவிட்டுள்ளார்.


Advertisement