வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார், ரசிகர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்து சின்மயி வெளியிட்ட வீடியோ.!



chinmayi explain about vairamuthu sex abuse complaint

கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்தது  திரையுலகை அதிர வைத்துள்ளது.இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவாகின்றன. 

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் பாலியல் சம்பவம் நடந்த பிறகு 2014-ல் நடந்த தனது திருமணத்துக்கு வைரமுத்துவை சின்மயி அழைத்தது ஏன்? என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். 
இந்த நிலையில் பாடகி சின்மயி தனது பேஸ்புக் நேரலையில் வீடியோ மூலம் அவர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணிடம் கேட்டாலும் தங்களுக்கு நிகழ்ந்த பார்த்த பாலியல் பிரச்சினைகளை குறித்து கூறுவார்கள். மேலும் தவறுகளை தட்டி கேட்டால், அல்லது தெரிவித்தால் அந்த பெண்கள் மீது குறை கூறி கேள்வி எழுப்பப்படுகிறது.என கூறினார்.

வைரமுத்துவால் பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரமுத்து தவறாக நடந்து கொண்டார் என்பதை கூற சக பாடகிகள் பலருக்கு தயக்கமாக உள்ளது .
மேலும் என் திருமணத்திற்கு மக்கள் தொடர்பாளர் மூலம் தான் வைரமுத்துவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. வைரமுத்துவை அழைக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை அனைவரிடமும் சொல்ல நேரிட்டு இருக்கும். 

சிறுவயதில் ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது. மீடூ விவகாரத்தில் ஆண்களும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை கூறத் தொடங்கி உள்ளனர். 

அரசியல் பின்புலத்துடன் இருக்கும் வைரமுத்துவை எதிர்க்க அப்போது தைரியம் இல்லை. வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்; நான் வெட்கப்பட மாட்டேன் என கூறினார்.