வாவ்.. கியூட்ட்டான இரட்டைகுழந்தைகளுக்கு தாயான பாடகி சின்மயி! அட.. பெயர் என்னனு பார்த்தீங்களா!!chinmayi-blessed-with-twin-baby

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் சின்மயி. மேலும் இவர் டப்பிங் கலைஞராகவும் இருந்து வருகிறார். பாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவிந்திரனை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

சுமார் எட்டு ஆண்டுகளாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்த அவர் தற்போது இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவாகியுள்ளார். அதாவது அவர் ஒரு பெண்குழந்தை மற்றும் ஆண்குழந்தைக்கு அம்மாவாகியுள்ளார். குழந்தைகளின் பிஞ்சு விரல் புகைப்படங்களை பகிர்ந்த அவர் எனக்கும் ராகுலுக்கும் இனி இவர்கள் இருவரும்தான் உலகமே என கூறியுள்ளார்.

மேலும் சின்மயி தனது ஆண்குழந்தைக்கு ஷர்வாஸ் என்றும்  பெண் குழந்தைக்கு த்ரிப்தா என்றும் பெயரிட்டுள்ளார். புகைப்படம் இணையத்தில் உள்ள நிலையில் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சின்மயி மற்றும் நடிகர் ராகுலுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.